வீதி விபத்துகளை தடுக்கும் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மருதமுனை றைடர்ஸ் ஹப் (Riders hub) சைக்கிளிங் கிளப் ஏற்பாடு செய்த 'வீதி விபத்துக்களை தவிர்ப்போம் - உயிர்களை காப்போம்' எனும் தலைப்பில் நடைபெற்ற மாபெரும் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி (06) சனிக்கிழமை காலை மருதமுனை பிரதான வீதியில் ஆரம்பமாகியது.

இரண்டாம் நாள் (07) பொத்துவிலில் இருந்து கல்முனை நோக்கி வந்தனர் இவர்களை கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை வைத்தியர் அதிகாரிகள் வரவேற்றதுடன் இங்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இந்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள் கல்முனை – பொத்துவில் பிரதான வீதி வழியாக பொத்துவில் வரை சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் செண்றனர். பிரதான வைத்தியசாலை முன்றல்கள் மற்றும் நகர்புற பகுதிகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு வீதி விபத்துக்களை தடுக்கும் வழிமுறைகள் பற்றிய அறிவுறுத்தல் துண்டு பிரசுரங்களையும் வினியோகித்தனர். இதில் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், கல்வி அதிகாரிகள், புத்திஜீவிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

(பெரியநீலாவணை விசேட நிருபர்)

Wed, 11/24/2021 - 08:42


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை