இருண்ட யுகம் விடியலை நோக்கி தீபத்திருநாளில் பிரகாசமாகட்டும்

-பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் வாழ்த்து

மனதிலிருக்கும் நல்ல எண்ணங்களை வளர்த்து சமூக நலன்கள் நோக்கியதாக நல்ல மனப்பாங்கை வளர்க்கும் உள்ளமாக அக விளக்கு இறை அருள் மூலம் பிரகாசிக்க இந்த தீபாவளி நாளில் தீபம் ஏற்றி மகா விஷ்ணு பெருமானை மனதார பிரதிப்போமாக என புத்தசாசன மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்‌ஷவின் இந்துமத விவகார இணைப்பாளரான கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள்  பாபுசர்மா தனது தீபாவளி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓரிரு வருடங்களாக உலகெங்கும் வாட்டி வதைத்த கொரோனா நோய் உலகவாழ் மக்கள் அனைவரினதும் இறை பிரார்த்தனை காரணமாக படிப்படியாக குறைவடைய தொடங்கிவிட்டது. ஒரு கட்டத்தில் இருண்ட யுகத்தை நோக்கி போய்க்கொண்டிருந்த இந்த உலக வாழ்வு இப்போது இறை அருளால் அது விடியலை நோக்கி இப்போது பயணிப்பதாகவே தெரிகிறது. இந்த பயணம் அனைத்து மக்களுக்கும் நல்ல பிரகாசமாக அவர்களது வாழ்வு சிறப்படையவும் இந்த தீபாவளி தினத்தில் நாம் ஏற்றும் தீபம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் பக்தியையும் தரக்கூடியதாக அமைய நாம் அனைவரும் தீபம் ஏற்றி பிரார்த்திப்போம். முழு உலக வாழ் மக்களும் ஷேமமாய் இருக்க இந்த தீபாவளி நன்னாளில் குடும்ப உறவுகளுடன் தீபம் ஏற்றி மகா விஷ்ணுவை பிரார்த்திப்போமாக.

மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அகல வேண்டும். நல்ல எண்ணங்கள் நிரம்ப வேண்டும். அனைவரும் தீர்க்க ஆயுளுடன் சுபிட்சமாக வாழ இந்த தீபாவளி நாளில் நாங்கள் ஒன்று சேர்ந்து இலங்கையர்களாக அனைவருக்காகவும் பிரார்த்திப்போம் என்றும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்..

Thu, 11/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை