கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் பரீட்சையில் சாஜித் வாஹிட் சித்தி

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினால் நடாத்தப்பட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் தரம் 1 (ICC Level 1 Coach) பரீட்சையில் நிந்தவூர்-2 ம் பிரிவைச் சேர்ந்த அப்துல் வாஹிட் சாஜித் சித்தியடைந்துள்ளார்.

கடந்த வாரம், மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடாத்தப்பட்ட கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் (ICC Level 1 Coach) தரம் 1 பரீட்சையில் நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகத்தின் சார்பில் பங்கு பற்றியிருந்தார்

இப்பரீட்சையில், கிழக்கு மாகாணத்தில் இருந்து 24 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் நிந்தவூர் பிரதேசத்தில் இருந்து இப் பரீட்சைக்கு தோற்றி சித்தி அடைந்த முதலாவது நபரும் இவர் ஆகும்.

இதன் மூலம் லகான் விளையாட்டு கழகத்திற்கும் தான் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் NCC கழக உறுப்புரிமையையும் கொன்ட ஒரு வீரர் என்பதுடன், நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் கடின பந்து பயிற்றுவிப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நிந்தவூர் குறூப் நிருபர்

Sun, 11/28/2021 - 06:00


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை