முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே காலமானார்

முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே காலமானார்-Former Minister B Sirisena Cooray Passed Away

முன்னாள் அமைச்சர் பி. சிறிசேன குரே கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (30) காலாமானார்.

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அவர், 1989 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அரசாங்கத்தில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தார்.

ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ காலப் பகுதியில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

அவர் 1979 - 1989 காலப் பகுதியில் கொழும்பு மேயராகவும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 11/30/2021 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை