சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஒக்டோபரில் மாத்திரம் 22,771 பேர் வருகை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாக கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 22,771 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தை விடவும் 68 சதவீதம் அதிகரிப்பு என சபை குறிப்பிட்டுள்ளது. கடந்த 10 மாத காலப்பகுதியில் நாட்டை வந்தடைந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 60,000 ஐக் கடந்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் (18,466 பேர்) இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஐக்கிய அரபு இராச்சியம், ஜெர்மனி, கஸகஸ்தான் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளின் சுற்றுலாப்பயணிகளும் இலங்கை வந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

 

Wed, 11/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை