சீனாவில் தொழிற்சாலை செயற்பாட்டில் வீழ்ச்சி

மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு தேவைகள் குறைந்திருப்பதன் காரணமாக சீனாவின் தொழிற்சாலை செயற்பாடுகள் இரண்டாவது மாதமாக கடந்த ஒக்டோபரிலும் சுருங்கியுள்ளது. இது 2021 இன் இறுதி காலாண்டில் மேலும் பொருளாதார பின்னடைவுக்கு வழி வகுத்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் உத்தியோகபூர்வ உற்பத்தி கொள்வனவு முகாமைத்துவ சுட்டென் 49.2 ஆக இருந்தது.

இது செப்டெம்பரில் பதிவான 49.6 ஐ விடவும் வீழ்ச்சி கண்டுள்ளது என்று தேசிய புள்ளிவிபரவில் பணியகம் குறிப்பிட்டுள்ளது. நிர்மாணங்களில் 50 புள்ளி பிரேத்தியே வளர்ச்சியை பதிவிட்டுள்ளது. அது 49.7 ஆக இருந்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சீனாவின் பரந்த உற்பத்தி துறையில் இந்த ஆண்டில் நிலையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 11/03/2021 - 07:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை