கொழும்பு பாதுகாப்பு கூட்டுக்குழும வழிகாட்டலில் இந்தியா-இலங்கை-மாலைதீவு முத்தரப்பு கூட்டுப் பயிற்சி நிறைவு

இந்தியா – இலங்கை – மாலைதீவுகள் இடையிலான முத்தரப்பு கூட்டு கடற் பயிற்சிகள் கடந்த 27-, 28ஆகிய திகதிகளில் நடைபெற்றன. கொழும்பு பாதுகாப்பு கூட்டுக் குழுமத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் இந்தப் பயிற்சிகள் நடைபெறுவதுடன் கடற்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளுக்கான ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய செயற்பாடாகவும் இது அமைகின்றது.கொழும்பு பாதுகாப்பு கூட்டுக் குழுமத்தின் அவதானத்துடனான இந்த நடவடிக்கைகள் நிலையான செயற்பாட்டு நடைமுறைகளை தழுவியதாகவும் மூன்று கடற்படையினரதும் இயங்கு திறனை மேம்படுத்துவதாகவும் அமைகின்றன. இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்.சுபத்ரா ரோந்துக் கப்பல் மற்றும் P8I நீண்ட தூர கடல் ரோந்து விமானம், அதேபோல இலங்கை கடற்படைக்குச் சொந்தமான எஸ்.எல்.என்.எஸ். சமுதுர ஆகியவை இப் பயிற்சிகளில் இணைந்திருக்கும் நிலையில் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான MNDF கடல்மார்க்க வேவு விமானமும் இவற்றுடன் இணைந்துள்ளன. இந்த இருநாள் பயிற்சிகள், அந்தந்த பிரத்தியேக பொருளாதார வலயங்களில் (EEZ) போதைப் பொருள் கடத்தல் தடுப்பு, தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் கடலில் மீட்பு நடவடிக்கைகள், வான் மார்க்கமான மீட்புப் பணிகள் மற்றும் வினைத்திறன் மிக்க தொடர்பை ஸ்தாபித்தல் ஆகிய விடயங்களில் கள ரீதியான ஈடுபாட்டினைப்பெற்றுக்கொள்வதற்குவழிவகுத்துள்ளது.

கொழும்பு பாதுகாப்பு கூட்டுக் குழுமமானது கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்டத்திலான நான்காவது முத்தரப்பு மாநாட்டில் நிறுவப்பட்டதுடன் அதற்கான செயலகம் 2021மார்ச் கொழும்பில் நிறுவப்பட்டது.

2021 ஆகஸ்ட்டில் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு கூட்டுக் குழுமத்தின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட மாநாடு பிராந்தியத்தில் பொதுவான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளுதல் தொடர்பான புரிதல் மற்றும் சிறந்த இயங்குதிறனை அடைவதற்கான சிறந்த வாய்ப்புக்களை வழங்கியது.

Mon, 11/29/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை