சுமந்திரன் எம்.பி குழுவினரது விஜயம் தனிப்பட்ட விவகாரம்

அரசிற்கு அழைப்பு வந்தால் ஏற்போம்

சுமந்திரன் உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா சென்றமை அவர்களது தனிப்பட்ட விவகாரம் என தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும, சர்வதேச அமைப்போ வேறு  ஏதும் நாடோ ஏதும் விடயம் தொடர்பில் பேச அழைத்தால் அரசு அதனை நிராகரிக்காது எனவும் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டிலே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அரசியல் தீர்வு தொடர்பில் பேசுவதற்கு சுமந்திரன் உள்ளிட்ட சிரேஷ்ட சட்டத்தரணிகள் அமெரிக்காவுக்கு சென்று வந்தனர்.அரசாங்க தரப்பிற்கு இது தொடர்பில் அழைப்பு வரவில்லையா? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, அரச தரப்பிற்கு இவ்வாறு எந்த அழைப்பும் கிடைக்கவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் தனிப்பட்ட ரீதியில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையென்றே அதனை கருதுகிறேன். சர்வதேச அமைப்போ வேறு ஏதும் நாடோ ஏதும் விடயம் அல்லது தலைப்பில் பேச அழைத்தால் அரசு அதனை நிராகரிக்காது. ஆனால் இன்று வரை அவ்வாறு எந்த அழைப்பும் வரவில்லை என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

Thu, 11/25/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை