தொழிற்சங்கங்கள் அரசியல் கோணத்தில் செயற்படக்கூடாது

மக்களை பற்றி  சிந்திப்பது அவசியம் 
 

நாட்டை இரு தினங்கள் இருட்டில் வைத்திருக்க முயல்வது நாட்டு மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும் என ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில்  இறங்கப் போவதாக தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தொழிற்சங்கங்கள் எடுக்கும் அனைத்து முடிவும் சரியானது என கூற முடியாது. தொழிற்சங்கங்கள் அரசியல் கோணத்தில் அல்லாமல் நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலை குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.

பேலியகொட புதிய களனி பாலத்தின் இறுதிக்கட்ட நிர்மாணப் பணிகளை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கப் போவதாக தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. தொழிற்சங்கங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் சரியானது என்று கூறமுடியாது. தொழிற்சங்கம் என்பது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாகும்.

அண்மையில் துறைமுக தொழிற்சங்கங்கள் கிழக்கு முனையத்தை வழங்குவதை எதிர்த்தன. இதன் விளைவாக கிழக்கு முனையத்திற்கு பதிலாக அதனை விட பெரிய மேற்கு முனையம் வழங்கப்பட்டது. தொழிற்சங்கங்கள் அரசியல் கோணத்தில் இல்லாமல் நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலை குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும்.

ஒரு அலகு மின்சாரத்தின் விலை குறைவதாக இருந்தால் தொழிற்சங்கங்கள் ஏன் அதனை எதிர்க்கின்றன? குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் அது ஊழல்ல.

தொழிற்சங்கங்கள் அதிக விலை யின் பக்கம் சார்பாக இருந்தால் அதன் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது. தொழிற்சங்கங்கள் இந்த நாட்டு மக்களை இரண்டு நாட்களுக்கு இருட்டில் வைத்திருக்க முயல்கின்றன என்றால் அது எத்தகைய அநீதியான முடிவாகும். இதை நாட்டு மக்கள் மிகஅவதானமாகநோக்க வேண்டும். இந்த நேரத்தில் மின்சார கட்டணத்தை குறைக்கும் அரசின் திட்டம் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும். நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வர நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த தரப்பினர் மிகுந்த ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட்டு வருகின்றனர் என்றும் அவர்தெரிவித்துள்ளார்.(ஸ)

 லோரன்ஸ்செல்வநாயகம்

Tue, 11/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை