மட்டக்களப்பில் ஆலயங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்

ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பன்குடாவெளி சிவ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீ சித்திவிநாயகர்  

ஆலயங்களிற்குள் ஞாயிற்றுக்கிழமை  அதிகாலை புகுந்த காட்டு யானைகளினால், ஆலயங்களிற்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் ஆலயங்களின் கட்டிடங்கள் பகுதியளவில் சேதமாகியுள்ளதுடன், ஆலய வளாகத்தில் நடப்பட்டிருந்த பயன்தரும் மரங்களையும் முற்றாக சேதப்படுத்தியுள்ளன. 

அத்தோடு ஆலயங்களிற்குள் புகுந்த காட்டு யானைகள் பூசைக்காக வைக்கப்பட்டிருந்த பூசைப்பொருட்களையும் சேதப்படுத்தியுள்ளது. 

அண்மைக்காலமாக இப்பகுதிகளில் யானைகள் அதிகமாக சஞ்சரிப்பதை காணமுடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் 

 

Thu, 11/04/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை