ஆஸியில் தனிமைப்படுத்தல் ஹோட்டலின் மீது தீ வைப்பு

அவுஸ்திரேலியாவின் கேர்ன்ஸ் நகரிலுள்ள தனிமைப்படுத்தும் ஹோட்டல் ஒன்றுக்குத் தீ வைத்ததாகப் பெண் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவரும் அவரது இரு பிள்ளைகளும் தங்கியிருந்த பசிபிக் ஹோட்டல் கேர்ன்ஸ் எனும் ஹோட்டலுக்கு அந்த 31 வயதுப் பெண் தீ வைத்ததாக கூறப்படுகிறது.

11ஆவது மாடியைப் பெரிய அளவில் சேதப்படுத்திய தீயால் ஹோட்டலிலிருந்து 160க்கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர். தீச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் தற்போது தடுப்புக்காவலில் இருப்பதாகவும் அவரது பிள்ளைகளைக் பொலிஸ் அதிகாரிகள் பார்த்துக்கொள்வதாகவும் அவுஸ்திரேலிய பொலிஸ் தெரிவித்தது. அவுஸ்திரேலியாவில் இரு புதிய கொரோனர திரிபு சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நாட்டில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகளாக அவுஸ்திரேலியா இருபது மாதங்களாக எல்லை கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளது. இது உலகின் கண்டிப்பான எல்லைக் கட்டுப்பாடுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

Tue, 11/30/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை