சீனாவில் கொரோனா கட்டுக்கடங்காது பரவல்

வேகமாகப் பரவும் டெல்டா வகை வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சீனா போராடி வருகிறது.

சீனாவின் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள், வட்டாரங்களில் புதிய வைரஸ் பரவல் நீடிக்கிறது. மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தினர்.

சீனாவில் புதிதாக 93 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவின் 18 மாநிலங்கள், நகர மன்றங்களில் புதிதாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 500 ஆக உயர்ந்துள்ளது.

ஜூலையில் அடையாளம் காணப்பட்ட நான்ஜிங் விமான நிலைய வைரஸ் பரவலை விட, தற்போது நிலைமை சிக்கலாய் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

நான்ஜிங்கிலிருந்து ஒரு வாரத்துக்குள் 15 நகரங்களுக்கு நோய் பரவியது.

அதுபோல் இல்லாமல், அடையாளம் காணப்படாத பலரிடமிருந்து தற்போதைய பரவல் ஏற்பட்டிருப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நெருங்கி வரும் குளிர்காலம் வைரஸ் பரவலை மேலும் மோசமாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

மத்திய சோங்கிங், ஹெனான், கிழக்கு கடற்கரையில் ஜியாங்சு ஆகிய மாகாணங்களில்தான் பெரும்பாலான பரவல் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இல்லாத மாகாணத்தை பராமரிக்க உறுதி பூண்ட நிலையிலும், முன்னதாக கட்டுக்குள் வைத்த நடவடிக்கைகளை தாண்டியும் டெல்டா வகை வேகமாக பரவிவருகிறது என சீன அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'டெல்டா கொரோனாவை ஒழிக்க நடவடிக்கைகள் தேவைப்பட்டது. ஆனால், மற்ற நாடுகள் அதன் கவனத்தை ஒழிப்பதில் செலுத்தாமல் தடுப்பூசி விநியோகத்தை அதிகப்படுத்தவதில் செலுத்திவருகின்றன. அதை, எண்டெமிக் நோயாக கருதி அதனுடன் வாழ கவனம் செலுத்துகின்றனர்' என்றார்.

நேற்று புதன்கிழமை மட்டும், தலைநகரம் பீஜிங்கில் ஒன்பது பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அதில் ஒருவருக்கு அறிகுறி தென்படாத கொரோனா உறுதியாகியுள்ளது. கொரோனா அலை காரணமாக, மொத்தம் 38 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி, பெப்ரவரியில் டெல்டா கொரோனா பரவ ஆரம்பிப்பதற்கு முன்பிருந்ததை விட அது அதிகம்.

Thu, 11/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை