மாகாணங்களுக்கிடையிலான பஸ் சேவைகள்; ஆசனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பயணிகள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் மாகாணங்களுக்கிடையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நேற்று அதிகாலை 4.00மணியிலிருந்து முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை நீக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் மாகாணங்களுக்கிடையிலான பஸ் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பஸ் வண்டிகளில் ஆசனங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் முதற்கட்டமாக 1600பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது.

அத்துடன் பயணிகளுக்குத் தேவையான அளவில் குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் சேவைகளை  அதிவேக நெடுஞ்சாலையில் நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் 50வீதமான தனியார் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்தது.

அது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கையில்,

தனியார் பஸ் சேவையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு இன்னும் ஒரு வருட காலம் எடுக்கும் என தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 
Mon, 11/01/2021 - 12:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை