காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நேற்று ஆரம்பமானது

இன்று உலகத் தலைவர்களது மாநாடு

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நேற்று ஆரம்பமானது. காலநிலை மாற்றங்களும்,  அதற்கு முகங்கொடுத்துச் செயற்படுவதற்காக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாக இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது.

நேற்று ஆரம்பமான மாநாடு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை இன்றும் மற்றும் நாளை உலகத் தலைவர்களின் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.இதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் பங்கேற்று உரையாற்றவுள்ளார்.

இந்த மாநாட்டில், 197 நாடுகளின் அரச தலைவர்கள், அரச பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Mon, 11/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை