சர்வதேச அளவில் ஒமிக்ரோன் பரவ வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

கடுமையான விளைவுகள் ஏற்படலாம் என WHO அறிவிப்பு

ஒமிக்ரோன் வைரஸ் சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.  

இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தவும், அத்தியாவசிய சுகாதார சேவைகள் நடைமுறையில் இருப்பதை உறுதிப்படுத்தவும் உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.  

ஒமிக்ரோன் வைரஸ் முன் அறிகுறிகளற்ற பல பிறழ்வுகளைக் கொண்டுள்ளது.  

இதனால் ஒட்டுமொத்த உலகளாவிய ஆபத்து மிகவும் அதிகமாக மதிப்பிடப்படுகிறது எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.  

Tue, 11/30/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை