"யுகதனவி" ஆவணங்களை சமர்ப்பிக்க அரசு இணக்கம்

ரணிலின் கோரிக்கைக்கு தினேஷ் பதிலளிப்பு

கெரவலப்பிட்டி யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின்  40 சதவீத பங்குகளை வழங்குவதற்கு அமெரிக்க நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை முன்வைக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்திடம் நேற்று பாராளுமன்றத்தில் வைத்து கோரிக்கை விடுத்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பல அரசியல் கட்சிகள் குறித்த உடன்படிக்கை தொடர்பில் அறியவில்லை என குறிப்பிட்ட அவர், யுகதனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில் நிலைப்பாட்டை எடுப்பதற்கு முன்னர் ஆவணங்களை ஆராய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒப்பந்தம் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். உடன்படிக்கை தொடர்பான ஆவணங்களை பாராளுமன்றத்தில் சமர்பிக்க அமைச்சர் இணங்கியதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன இதன் போது தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்த ஒப்பந்தத்தை அமைச்சரவையில் முன்வைக்காமல் அரசாங்கம் கைசாத்திட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் முன்னர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டதாகவும், அதற்கான விளக்கத்தை உரிய அமைச்சர் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.

ஷம்ஸ் பாஹிம்

Tue, 11/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை