மூதாட்டி கொவிட் தொற்றினால் பலி; பேத்தியின் பூப்புனித நீராட்டு விழாற்கு சென்றோர் தனிமைப்படுத்தல்!

மூதாட்டி கொவிட் தொற்றினால் பலி; பேத்தியின் பூப்புனித நீராட்டு விழாற்கு சென்றோர் தனிமைப்படுத்தல்!-Puberty Function-Elderly Woman Died due to COVID19

தனது பேத்தியின் பூப்புனித நீராட்டு விழாவில் கலந்து கொண்ட மூதாட்டி கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூதாட்டி தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மூதாட்டியின் வீட்டில் அவரது பேத்திக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. மூதாட்டி கொரோனா தொற்றால் உயிரிழந்தமையால் அந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தி வருகின்றனர்.

யாழ்.விசேட நிருபர்

Fri, 11/05/2021 - 10:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை