ஆப்கானுக்கு இந்திய உதவி செல்ல பாகிஸ்தான் அனுமதி

ஆப்கானிஸ்தானுக்குத் தேவையான மனிதாபிமான உதவிப்பொருட்களை, பாகிஸ்தான் நிலப்பாதை வழியாக அனுப்பிவைக்கும் இந்தியப் பரிந்துரைக்கு, பாகிஸ்தான் அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் அந்த அனுமதியைத் தாமதப்படுத்தி வருவதாக இந்தியா குறைகூறி இருந்தது.

ஆப்கானிஸ்தானுக்கான மனிதாபிமான நிவாரணப் பொருட்கள், எவ்விதத் தடையுமின்றி அங்கே சென்றுசேர வேண்டுமென, இந்தியா வலியுறுத்திவந்தது. அதனை ஏற்றுத் தமது அரசாங்கம் 50,000 மெட்ரிக் தொன் கோதுமையும் மருந்துப் பொருட்களும் அனுப்ப அனுமதிப்பதாகப் பாகிஸ்தானியப் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்.

மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவுக்குச் சென்று அங்கே சிக்கிக்கொண்டுள்ள ஆப்கானிய நோயாளிகள், நாடு திரும்பத் தேவையான உதவிகளையும் பாகிஸ்தான் வழங்கும் என்று அவர் கூறியதாக தி ஹிந்து நாளேடு குறிப்பிட்டது.

பாகிஸ்தானின் அறிவிப்பு குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சு இதுவரை பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. இதேவேளை ஆப்கானுக்கு மருந்து, உணவு மற்றும் மனிதாபிமான உதவியாக 28 மில்லியன் டொலருக்கு மேல் வழங்க பாகிஸ்தான் உறுதி அளித்துள்ளது.

Wed, 11/24/2021 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை