பிரதான புகையிரத போக்குவரத்து வியாங்கொடை வரை மட்டுப்பாடு

பிரதான புகையிரத போக்குவரத்து வியாங்கொடை வரை மட்டுப்பாடு-Train Services on Main Line Limited to Veyangoda Due to a Sinkhole

பிரதான புகையிரத பாதையிலான புகையிரத போக்குவரத்து வியாங்கொடை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, புகையிரத பொது முகாமையாளர் அறிவித்துள்ளார்.

விஜய ரஜதஹன மற்றும் மீரிகமை புகையிரத நிலையங்களுக்கு இடையில், வெள்ளம் காரணமாக புகையிரத பாதையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த புகையைிரத பாதையை சீர் செய்ய பராமரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, குறித்த பணி நிறைவடையும் வரை, பிரதான பாதையிலான புகையிரத சேவைகள், கொழும்பு கோட்டையிலிரந்து வியாங்கொடை புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்கள பொறியியலாளர்கள் குழு சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நோக்கிய புகையிரத பாதையின் ஸ்லிப்பர் கட்டைகளுக்கு அடியில் இவ்வாறு தாழிறக்கம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ரயில்வே அதிகாரிகள் கேள்வியுற்றதும், புகையிரதத்தை முதலில் ஒரு வழிப்பாதையில் மட்டும் மட்டுப்படுத்தினர்.

குறித்த தாழிறக்க பகுதியை சரி செய்யும் பணியில் புகையிரத திணைக்கள அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Sun, 11/14/2021 - 14:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை