ரஷ்ய பாதுகாப்புச் சபை செயலர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

ரஷ்யாவின் பாதுகாப்புச்சபை செயலாளர் நிக்கொலாய் பட்ருஷெவ் (Nikolai Patrushev) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவை, நேற்று முன்தினம் (22)ஜனாதிபதி அலுவலகத்தில்  சந்தித்தார்.

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான இருதரப்புத் தொடர்புகள், 2022பெப்ரவரி 19ஆம் திகதியுடன் 65ஆண்டுகள் பூர்த்தியை அடைகின்றன. நிக்கொலாயின் இந்த விஜயத்தின் மூலம், இருநாடுகளுக்கிடையிலான தொடர்புகள் மேலும் பலப்படுத்தப்படுவதாக, ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார். நிக்கொலாய் பட்ருஷெவ் கொண்டுவந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ஸ்பூட்னிக் தடுப்பூசிகள் 5,000மற்றும் கொவிட்19தடுப்பூசியேற்றலை வெற்றிகொள்ள ரஷ்யா வழங்கிய ஒத்துழைப்புக்கு  ஜனாதிபதி நன்றி  தெரிவித்தார். 

ரஷ்யாவின் ஜீஎஸ்பி (GSP) முறைமையின் கீழ் மேற்கொள்ளப்படும் ஏற்றுமதி உற்பத்திகளை விரிவுபடுத்த இலங்கை எதிர்பார்க்கின்றது. கொழும்பு துறைமுக நகரம், மின்சக்தி, மருந்து உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், விவசாயத்துறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளைச் செய்வதற்கு, ரஷ்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர் என்ற வகையில், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் சமாதானம் மற்றும் பாதுகாப்புக்காக முன்னிலையாவது தொடர்பில்ரஷ்யாவுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்த ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.

Wed, 11/24/2021 - 08:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை