அரசாங்கத்திலிருந்து விலகமாட்டோம்; சு.க செயலாளர் தயாசிறி தெரிவிப்பு

 

அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கான எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தொடர்பில் சில விமர்சனங்கள் இருந்தாலும் தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருணாகலில் நடைபெற்ற நிகழ்வொன்றி ன் பின்னர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

"அரசிலிருந்து விலக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான பிரசாரங்கள் செய்கிறார்கள். அதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் இன்னும் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுகிறோம்." என்றார். அரசாங்கத்தின் மீது உங்களுக்கு ஏமாற்றம் இல்லையா? என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர்,  "இல்லை, இல்லை, அரசாங்கம் தொடர்பில் எந்த ஏமாற்றமும் இல்லை. அந்தந்த சமயங்களில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கிறோம். எனவே நாங்கள் உருவாக்கிய அரசாங்கம் இது. நாங்கள் உருவாக்கிய ஜனாதிபதி . எனவே, அரசாங்கத்திலுள்ள பலவீணங்களை சரிசெய்து முன்னோக்கி செல்ல முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Mon, 11/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை