ஒன்லைன் யுகத்துக்கு பொருத்தமான கல்வி

அவசியம் என்கிறார் ஐ.தே.க தலைவர்

நாட்டின் கல்வியை ஒன்லைன் யுகத்துக்கு பொருத்தமான வகை யில் மறுசீரமைப்பு செய்வது  அவசியமென்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சூம் தொழில்நுட்பம் மூலமான விவாதமொன்றில் அவர் கலந்து கொண்டபோது நாட்டின் கல்வித்துறை தொடர்பில் அவரிடம் எழுப்பப்பட்டுள்ள கேள்விக்குப் பதிலளிக்கும் போதே ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

தாம் கல்வி அமைச்சுக்குப் பொறுப்பாக இருந்த காலத்தில் சிறந்த கல்வி முறைமைக்கான அடிப்படையை உருவாக்கியதாகவும் எனினும் தற்போது மீண்டும் கல்வி முறைமையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய தேவை எற்பட்டுள்ளதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 11/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை