பட்ஜட் உரையைச் செவிமடுக்க பாராளுமன்றம் சென்ற ஜனாதிபதி

இறுதிவரை சபையில் அமர்ந்திருந்து செவிமடுத்தார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, 2022 நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையைச் செவிமடுப்பதற்காக நேற்று (12) பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்தார்.

சுதந்திர இலங்கையின் 76 ஆவதும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அராசாங்கத்தின் 02ஆவதும் வரவு – செலவுத் திட்டம் இதுவாகும்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு வருகை தந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை, அவைத் தலைவர் தினேஷ் குணவர்தன, ஆளுங் கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெனாண்டோ, அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, கஞ்சன விஜேசேகர, தேனுக்க விதானகமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே ஆகியோர் வரவேற்றனர்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ , தனது வரவு – செலவுத் திட்ட உரையை ஆரம்பித்தபோது, ஆளுங்கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுடன், ஜனாதிபதி சபைக்குள் பிரவேசித்தார்.

Sat, 11/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை