சீனாவில் கொரோனா தீவிரம்

கொரோனா தொற்று அதிகரிப்பதை தடுப்பதில் சீனா அழுத்தத்தை எதிர்கொண்டிருப்பதாக சீனாவின் நோய்த் தடுப்பு கட்டுப்பாட்டு தேசிய சுகாதார ஆணையத்தின் பிரதிப் பணிப்பாளர் வு லியாங்யு குறிப்பிட்டுள்ளார்.

சீனாவில் தற்போது ஏற்பட்டுள்ள கோரானா அலையில் 20 மாகாணங்களில் 44 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்பில்லாத பல இணைப்புகளைக் கொண்ட சுமார் 918 புதிய நோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் கொவிட்-19 தொற்றை முற்றாக ஒழிக்கும் சீனாவின் கொள்கைக்கு பெரும் நெருக்கடி ஏற்படுத்தியுள்ளது.

Wed, 11/10/2021 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை