பளளுவெவ ரொலெக்ஸ் பிரிமீயர் லீக் வெற்றிக் கிண்ணத்தை அதே கண்கள் அணியினர் சுவீகரிப்பு

பளளுவெவ ரொலெக்ஸ் விளையாட்டுக்கழகத்தினால் நான்காவது முறையாகவும் நடாத்தப்பட்ட பளளுவெவ ரொலெக்ஸ் பிரிமீயர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி அண்மையில் பளளுவெவ பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது.இதில் ஆறு அணிகள் கலந்து கொண்டதுடன் கடந்த் 22 ஆம் திகதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் அதே கண்கள் அணியும், பூம் பூம் எமரயிட்ஸ் அணியும் தகுதி பெற்று போட்டியிட்டதுடன் அதே கண்கள் அணி இவ்வருடத்திற்கான பளளுவெவ ரொலெக்ஸ் பிரிமீயர் லீக் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இன நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய இக்கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்றது.

கெகிராவ பிரதேசத்திலுள்ள பிரபல விளையாட்டுக்கழகங்களைச் சேர்ந்த சகலதுறையிலும் திறமை காட்டும் சிங்கள,முஸ்லிம் கிரிக்கெட் வீரர்களை இணைத்து இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி வருடா வருடம் நடாத்தப்பட்டு வந்ததுடன் கொரோனா தொற்று காரணமாக இத்தொடர் 2020 ஆம் ஆண்டு நடைபெறவில்லை.என்றாலும் இந்த ஆண்டு காலனிலையும் பராது நடாத்தப்பட்டது.

இப்போட்டித் தொடரில் ஆறு அணிகள் கலந்து கொண்டதுடன், ஒவ்வொரு அணியிலும் நான்கு வெளியூர் வீரர்களும் ஏழு உள்ளூர் வீரர்களும் கலந்து கொண்டனர். லீக் முறையில் நடந்த இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இறுதிப் போட்டியில் அதே கண்கள் அணியும் பூம்,பூம் எமரயிட்ஸ் அணியும் கலந்து கொள்ள தகுதி பெற்றன. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பூம் பூம் எமரயிட்ஸ் அணி தமக்கு வழங்கப்பட்ட ஆறு ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 58 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டன.

இதில் அணித்தலைவர் சிபான் 33 ஓட்டங்களை அதி கூடிய ஓட்டங்களாக பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் அதே கண்கள் சார்பில் ஒரு ஓவரில் 02 ஓட்டங்களை மட்டும் கொடுத்து நஸ்லின் 02 விக்கெட்டுக்களையும், ரிப்லான் ஒரு ஓவர் பந்து வீசி 02 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றிக் கொண்டனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அதே கண்கள் அணி 3.4 ஓவர்களில் விக்கெட் எதுவும் இழப்பின்றி 59 ஓட்டங்களைப் பெற்று 10 விக்கெட்டுக்களினால் இலகுவான வெற்றியை பெற்றுக் கொண்டன. அதே கண்கள் அணியில் மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய சவாஹிர் ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும்,கசுன் ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களையும் பெற்று சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டினர்.

இப்போட்டித் தொடரில் சிறப்பாட்டக்காரராக ரொலெக்ஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த ரஸ்மிகான் தெரிவு செய்யப்பட்டார்.இவர் இத்தொடரில் 254 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன் பத்து விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

இவர் தொடரில் அதி கூடிய ஆறு ஓட்டங்கள் 34 சிக்ஸர் தமது துடுப்பாட்டத்தினால் தமது அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.தொடரில் அதி கூடுதலான 12 விக்கெட்டுக்களை ரொலெக்ஸ் அணியின் நஸ்லின் கைப்பற்றிக் கொண்டதுடன் இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக அதே கண்கள் அணியைச் சேர்ந்த சவாஹிர் தெரிவு செய்யப்பட்டார்.

(கல்நேவ தினகரன் விசேட நிருபர் )

Mon, 11/29/2021 - 09:50


from thinakaran

கருத்துரையிடுக

புதியது பழையவை