நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடுமில்லை

நாட்டில் எரிபொருளுக்கு எவ்வித தட்டுப்பாடுமில்லை-Udaya Gammanpila-No Fuel Shortage

நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு இல்லையென வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீண்டும் தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு பகுதியில் நேற்று (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமாயின் அது நிதியமைச்சின் ஊடாகவே முன்னெடுக்கப்படும்.

கடந்த காலங்களிலும் விலை அதிகரிப்பு தொடர்பான விபரங்கள் மாத்திரமே தம்மால் வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் தட்டுப்பாடின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

Mon, 11/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை