தடுப்பூ விடுக்கும் புதிய வைரஸ்

A30 குறித்து இலங்கை தீவிர கவனம்

 

உலக நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ள A30 என்ற கொரோனா திரிபு தொடர்பில் இலங்கை மிகுந்த எச்சரிக்கையாக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். திருமண நிகழ்வு மற்றும் மரண வீடுகளில் சுகாதார பாதுகாப்புகளை முன்னெடுக்காமல் செயற்படுவதனால் வைரஸ் தொற்று தீவிரமாக பரவும் வாய்ப்புகள் உள்ளது.

இந்த மாறுபாடு தொடர்பில் புதிய கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பைசர், எஸ்ட்ரா செனேக்கா தடுப்பூசி அனைத்தினாலும் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பை தடுக்கும் வகையில் A30 மாறுபாடு காணப்படுகிறது.

இது பரவினால் உலகம் மிகப்பெரிய நெருக்கடிக்குள்ளாகுமென உலகமே அவதானத்தை செலுத்தியுள்ளது. நாங்களும் இது தொடர்பில் அவதானத்துடனே உள்ளோம். அனைத்தும் முடிந்துவிட்டது என மக்கள் செயற்பட்டால் இன்னும் 04 வாரத்தில் ஆபத்தான முடிவு ஒன்றை பார்க்க நேரிடுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Mon, 11/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை