நேற்று முதல் மறுஅறிவித்தல் வரை கொன்சியூலர் பிரிவில் மட்டுப்படுத்திய சேவை

வெளிநாட்டு அமைச்சு அறிவிப்பு

வெளிவிவகார  அமைச்சின் கொன்சியூலர் விவகார பிரிவின் இலத்திரனியல் ஆவணச் சான்றிதழ்  சேவைகள் நேற்று (22) முதல் 150பேருக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மின்னணு  ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS)) ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த  வாரம் சான்றளிப்பு சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் இதனால், சேவைகளை  வழங்குவதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சு  தெரிவித்துள்ளது. மேலும், பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்கள்  மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் கிளை சான்றளிப்பு  முறைமையும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு தற்போது நிலைமையை சரிசெய்வதில் ஈடுபட்டுள்ளதுடன், அதுவரை சான்றளிப்பு சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப்  பிரச்சினைகள் சீர் செய்யப்பட்டவுடன் சான்றிதழ்கள் / ஆவணங்களின் சான்றளிப்புக்கான சாதாரண சேவைகள் வழங்கப்படும் என்றும், கணினிப் பராமரிப்பு சார்ந்த பணிகள் நிறைவடைந்தவுடன், புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 011- 2338812 அல்லது [email protected] மூலம் கொன்சியூலர் விவகாரப் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Tue, 11/23/2021 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை