மகாவலி கங்கைக்குள் காருடன் வீழ்ந்து காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

மகாவலி கங்கைக்குள் காருடன் வீழ்ந்து காணாமல் போன நபர் சடலமாக மீட்பு-Car Topples-Into Mahaweli River Near Ilukmodara Kandy-Missing Person's Dead Body Reocovered

கண்டி, குருதெனிய வீதியில் இலுக்மோதறை பகுதியில் மகாவலி கங்கைக்குள் காரொன்று பாய்ந்து விபத்துக்குள்ளானதில், காணாமற்போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மகாவலி கங்கைக்குள் காருடன் வீழ்ந்து காணாமல் போன நபர் சடலமாக மீட்பு-Car Topples-Into Mahaweli River Near Ilukmodara Kandy-Missing Person's Dead Body Reocovered

வேகக் கட்டுப்பாட்டை இழந்து மகாவலி கங்கைக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான கார் மற்றும் அதிலிருந்த மூவரில் ஒருவர் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் இவ்வாறு காணாமல் போன 39 வயது நபர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (27) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, அதில் பயணித்த இருவர் மீட்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

Sun, 11/28/2021 - 18:28

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை