பறக்கும் மர்மப் பொருள்கள் பற்றி பென்டகன் விசாரணை

அமெரிக்காவின் பாதுகாக்கப்பட்ட வான் பரப்பில் ‘பறக்கும் மர்மப் பொருள்கள்’ காணப்பட்டது தொடர்பான தகவல்களைப் பற்றி ஆராய ஒரு நடவடிக்கைக் குழுவை அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகன் அமைத்துள்ளது.

ஆர்வமூட்டும் பொருள்கள் பற்றி ஆராய்ந்து, தொடர்புடைய அச்சங்களைப் போக்க இந்தக் குழு உழைக்கும் என்று செவ்வாய்க்கிழமை பென்டகன் அறிவித்துள்ளது.

இந்த பறக்கும் மர்மப் பொருள்களை இராணுவ விமானிகள் பார்த்துக் குழம்பியுள்ளனர். இவை குறித்து தகவல்களும் அளித்துள்ளனர்.

பறக்கும் மர்மப் பொருள்கள் தோன்றியதாக வந்த இத்தகைய 144 தகவல்களை ஆராய்ந்து உண்மையை வெளிக்கொண்டுவரும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இராணுவ அறிக்கை ஒன்று கடந்த ஜூன் மாதம் வெளியானது. ஆனால், பறக்கும் மரமப் பொருள் குறித்து எந்த விளக்கத்தையும் அந்த அறிக்கையால் தர முடியவில்லை.

ஆனால், இந்தப் பொருட்கள் வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற கோணத்தை இந்த அறிக்கை மறுக்கவில்லை.

2004ஆம் ஆண்டு முதல் பறக்கும் மர்மப் பொருள்களைப் பார்த்ததாக செய்யப்பட்ட 144 பதிவுகளில் ஒரே ஒரு நிகழ்வுக்கு மட்டும் விளக்கம் கிடைத்துள்ளது. மீதி 143 நிகழ்வுகளுக்கும் எந்த விளக்கமும் இல்லை.

இந்தப் புதிய குழுவை உயர் மட்ட இராணுவ, உளவுத் துறை நிர்வாகிகள் மேற்பார்வை செய்வர்.

Sun, 11/28/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை