வாரத்தில் இரு தினங்கள் பார்வையிட அனுமதி

சிறைக்கைதிகளை அவர்களது உறவினர்கள் வாரத்தில் இரண்டு தடவைகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக கடந்த ஒகஸ்ட் 07 ஆம் திகதி முதல் சிறைக் கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதற்கு தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் சிறைக்கைதிகளை பார்வையிடுவதற்கு வாரம் ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அது தற்போது வாரம் இரண்டு தடவையாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, உறவினர்கள் சிறைக்கைதிகளுக்கு உணவுப் பொதிகளை எடுத்துவரும் போது, ஒருவருக்கு மாத்திரம் கொண்டுவர வேண்டுமென்றும் அதற்கான கறி வகைகளை தனித்தனியே அல்லாது ஒரே பார்சலாக கொண்டுவரவேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் தினமும் உணவு பெற்றுக்கொள்ளும் வகையில் சிறைச்சாலை உணவகம் கைதிகளுக்காக தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளதாகவும் அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்தது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 11/09/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை