மட்டக்குளி தம்பதி கைது செய்யப்பட்டு விசாரணை

பெண் பயணித்த ஆட்டோ சாரதியிடமும் விசாரணை

சபுகஸ்கந்தயில் பயணப் பொதியில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் மட்டக்குளி – சமதிபுர பகுதியில் வசிக்கும் கணவன், மனைவி இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் வீதிக்கு அருகில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்த இடத்தில் பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட பெண்னின் சடலம், மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த 45 வயதான இரு பிள்ளைகளின் தாயினுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட பெண் இறுதியாக பயணித்ததாக கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதி ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே இருவர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

 

Mon, 11/08/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை