மழையுடனான காலநிலை மேலும் சில தினங்களுக்கு

நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு

 

நாட்டில் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை மேலும் மூன்று தினங்களுக்கு தொடரும் என்ன வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுவதாகம் திணைக்களம் தெரிவிக்கிறது.

கடும் மழை காரணமாக சில நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்து காணப்பட்டுள்ளதாகவும் அதற்கிணங்க இரண்டு நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன என்றும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ். பி. சி. சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.

அதேபோன்று ஆறுகளினதும் நீர் மட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பாகவும் அவதானத்துடனும் செயற்படுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடும் மழை காரணமாக சில பிரதேசங்களில் வீடுகளின் மேல் மண்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் கொழும்பு, களுத்துறை, கண்டி,கேகாலை, குருணாகல், இரத்தினபுரி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.(ஸ)

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 11/29/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை