ஆப்கான் அச்சுறுத்தல் பற்றி பிரான்ஸ், இந்தியா சந்திப்பு

இந்தியா மற்றும் பிராஸுக்கு இடையே கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பங்கரவாதத்திற்கு எதிரான சந்திப்பு ஒன்றில், பரஸ்பரம் தமது நாடுகள் மற்றும் தமது பிராந்திய சூழலில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

தீவிரமயமக்கல் மற்றும் தீவிரவாத மூலம் ஒன்றாக ஆப்கானிஸ்தான் மாற்றப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டி இருப்பதாகவும் இருதரப்பும் குறிப்பிட்டுக் கூறின.

அல்கொய்தா, ஐ.எஸ், அதேபோன்று லக்ஷரே தையிப், ஜெய்ஷே முஹமது மற்றும் ஹிஸ்பே முஜாஹித் உட்பட அனைத்து பயங்கரவாத வலையமைப்புகளுக்கு எதிராகவும் வலுவான நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என்றும் வலியுத்தப்பட்டதோடு ஐ.நாவால் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள், தனிநபர்களால் விடுக்கப்படும் அச்சுறுத்தல் பற்றி தமது நிலைப்பாடுகளை பகிர்ந்துகொண்டன.

பாரிஸில் இடம்பெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான தமது கூட்டுப் பணிக்குழுன் இந்த 15 ஆவது கூட்டத்தில், பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு கருவியான பயங்கரவாத அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் மீதான தடை பற்றிய தமது பார்வையை பகிர்ந்துகொண்டன.

Sat, 11/20/2021 - 09:56


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை