ஆபிரிக்காவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு

1955 ஆம் ஆண்டு பண்டுங் மாநாடு தொடக்கம் ஆபிரிக்கா, சீனாவின் கூட்டாளியாக உள்ளது. 2021 ஆம் ஆண்டாகும்போது 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட ஆபிரிக்கா சீனாவின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச அரசியலில் மூலோபாய பிராந்தியமாக மாறியுள்ளது.

அந்த பிராந்தியத்தில் சீனா முன்னெடுக்கும் பொருளாதார அபிருத்திகள் பொருளாதாரத்தை விடவும் அரசியல் மூலோபாயத்தை கொண்டது என்று பார்க்கப்படுகிறது.

ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள இயற்கை வளங்கள் மாத்திரமன்றி, சர்வதேச அமைப்புகளில் சீனாவை வலுப்படுத்துவதாகவும் இருப்பதால் அந்தப் பிராந்தியம் சீனாவுக்கு இரண்டு வகையில் நலன் பயப்பதாக உள்ளது.

ஆபிரிக்க பிராந்தியம் 54 நாடுகளைக் கொண்டிருப்பதால் அது ஐ.நா அங்கத்துவத்தில் கால் பங்கை பெற்றுள்ளது. அது சீன இராஜதந்திர செயற்பாடுகளில் முக்கிய அரசியல் சக்தியாக பார்க்கப்படுகிறது. பல ஐ.நா அமைப்புகளில் சீனா தேர்வு செய்யப்படுவதற்கும் ஆபிரிக்க நாடுகள் உதவி புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 11/01/2021 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை