Arpico Insurance அறிமுகப்படுத்தும் அதிக நன்மைகளுடனான மருத்துவக் காப்பீடு!

வாழ்க்கையின் நிச்சயமற்ற நிலைமைகளில் பாதுகாப்பையும் மன நிம்மதியையும் வழங்குவதற்கு Arpico Insurance அண்மையில் Arpico HealthCare ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையர் தாமும் தமது குடும்பத்தினரும் ஆரோக்கியமான நல்வாழ்வை உறுதிசெய்து வாழ்வை முழுமையாகக் கொண்டு நடாத்த உறுதியளிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய Arpico HealthCare காப்பீடானது பங்கு இலாப அடிப்படையிலான எண்டோவ்மென்ட் (Endowment)காப்புறுதியாகும், இக் காப்பீடு செய்தவர்களுக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் ஆயுள் பாதுகாப்பின் நன்மைகளுடன் சேர்த்து பல திட்டமிடப்பட்ட பலன்களை வழங்குகின்றது.

புதிய அறிமுகம் குறித்து கருத்து தெரிவித்த Arpico Insurance இன் பிரதம நிறைவேற்றதிகாரி Kelum Senanayake,இந்த விரிவான, புதிய காப்புறுதித் திட்டம் இலங்கையர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சிறந்த சுகாதார பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் அவர்கள் வாழ்க்கையை முழுமையாக வாழமுடியும். இத் திட்டத்தில் வெளிநாட்டு சிகிச்சைகள் மற்றும் ஆயுர்வேத சிகிச்சைகள் போன்றனவும் உள்ளடங்கும்.

இக் காப்புறுதியின் ஒவ்வொரு அம்சமும் காப்புறுதிதாரர்களுக்கும் அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் சிறந்த சலுகைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் நம்பிக்கைதரும் சலுகைகளையும் கொண்டுள்ளது.

Arpico Insurance வழங்கும் இந்த விரிவான காப்புறுதித் தீர்வு பல அனுகூலங்களை வழங்குகின்றது, இது ஆரோக்கியத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் பாதுகாப்பதுடன் காப்புறுதியாளர்களுக்கு, வாழ்க்கைத்துணைக்கு, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு மருத்துவமனை அனுமதியின்போது பணமில்லா மற்றும் பணம் மீளச்செலுத்தும் அனுகூலத்தினையும் கொண்டுள்ளதுடன் நாளாந்த மருத்துவமனைப்படுத்தல் அனுகூலம் மற்றும் 40 விதமான பாரிய நோய்களுக்கான காப்பீடு போன்ற பல சலுகைகளையும் கொண்டுள்ளது. அத்துடன் இப் புதியதிட்டம், மேலதிக ஆயுள் காப்புறுதி அனுகூலத்தையும் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு வழங்குகின்றது, காப்புறுதியாளருக்கும் வாழ்க்கைத் துணைக்கும் விபத்து மரணக் காப்பீடும் வழங்கப்படுகின்றது, மேலும் இக் காப்புறுதித் திட்டம் மாதாந்த, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்த கட்டண முறைகளையும் கொண்டுள்ளது.

Sun, 11/21/2021 - 12:26


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை