சைனோபாம் பெற்றவர்களுக்கு 6 மாத காலங்களுக்குள் பூஸ்டர்

Dr.ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு

சைனோபாம் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளவர்கள் ஆறு மாதங்களுக்கிடையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.  

சுகாதாரத்துறை நிபுணர்களின் தீர்மானத்திற்கிணங்க அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், சைனோபாம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட நபர்கள் ஆறு மாத காலங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது சிறந்தது என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அதேவேளை, விசேட மருத்துவர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் ரஜீவ டி சில்வா அது தொடர்பில் தெரிவிக்கையில், சைனோபாம் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி மூன்று மாத காலங்களில் குறைவடைவதாகவும் தெரிவித்துள்ளார்.  

 சைனோபாம் பெற்றுக்கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பில் தெரிவித்துள்ள அவர், பைஸர், அஸ்ட்ரா செனெகா, ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களோடு ஒப்பிடுகையில் சைனோபாம் தடுப்பூசியை பெற்றுக்ெகாண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.  

அதேவேளை, மற்ற தடுப்பூசிகளை விட சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு அதிகமாக மீண்டும் வைரஸ் தொற்று ஏற்பட்டு வருவதாகவும் அவர்களின் உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  அதேவேளை, சைனோபாம் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளவர்களுக்கு 12வாரங்களுக்குப் பின்னர் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி வெகுவாக குறையும் நிலை காணப்படுவதாகவும் ஒவ்வாமை மூலக்கூற்று மருத்துவப் பேராசிரியர் நிலீகா மளவிகே குறிப்பிட்டுள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 

Wed, 11/03/2021 - 09:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை