தனியார் துறை ஓய்வூதிய வயது 60 ஆக அதிகரிப்பு

பாராளுமன்றத்தில் சட்ட மூலம் நிறைவேற்றம்

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லையை 60 ஆக அதிகரிப்பது தொடர்பான சட்ட மூலம் நேற்று சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. அத்தோடு வேலையாட்களின் வேலையை முடிவுறுத்தல் திருத்த சட்டமூலமும் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேறியது.

இந்த இரு சட்டமூலங்களையும் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்திருந்தார். இந்த சட்டமூலங்களுக்கு ஆளும் தரப்பு எதிர்தரப்பு எம்.பிக்கள் பலரும் ஆதரவாக கருத்துத் தெரிவித்தனர்.

இந்த சட்டங்களின் பிரகாரம் தனியார் துறை ஓய்வூதிய வயது 55 இலிருந்து 60 ஆக உயர்த்தப்படுகிறது.

சேவையை முடிவுறுத்துவதிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஷம்ஸ் பாஹிம்

Fri, 11/12/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை