அண்மையில் ரூ. 5 இனால் அதிகரிக்கப்பட்ட பாணின் விலை மேலும் ரூ. 10 இனால் அதிகரிப்பு

அண்மையில் ரூ. 5 இனால் அதிகரிக்கப்பட்ட பாணின் விலை மேலும் ரூ. 10 இனால் அதிகரிப்பு-Price of a Loaf of Bread-450g-Increased by Rs 10 From Midnight Today

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு இறாத்தல் (450 கிராம்) பாணின் விலையை ரூ. 10 இனால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் நேற்று (27) இரவு கூடிய இத்தீர்மானத்தை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோதுமை மா உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தமது பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் பாண் இறாத்தலின் விலை ரூ. 5 இனால் அதிகரிக்கப்பட்டிருந்தது. இதன்போது, கோதுமை மா மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகள் அதிகரிப்பே காரணமென, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sun, 11/28/2021 - 12:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை