கொழும்பு மற்றும் அண்டிய சில பகுதிகளில் ஒரு நாள் + 4 மணி நேர நீர் வெட்டு

கொழும்பு மற்றும் அண்டிய சில பகுதிகளில் ஒரு நாள் + 4 மணி நேர நீர் வெட்டு-28 Hour Water Cut in Parts of Colombo & Suburbs

- பவுசர்களில் நீர் விநியோகிக்க நடவடிக்கை

இன்று (13) சனிக்கிழமை இரவு 8.00 மணி முதல், நாளை ஞாயிற்றுக்கிழமை (14) நள்ளிரவு வரையான காலப் பகுதியில் 28 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.

அம்பத்தலையில் இருந்து கோட்டே நீர்த் தாங்கிக்கு நீர் விநியோகம் செய்யும் பிரதான நீர் விநியோக குழாயில் ஏற்பட்ட நீர்க் கசிவு காரணமாக, அதன் திருத்தப் பணிகளுக்காக இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக சபை அறிவித்துள்ளது.

அந்த வகையில் கொழும்பில், கொழும்பு 04 (பம்பலபிட்டி), கொழும்பு 05 (நாராஹேன்பிட்டி, கிருலப்பனை), கொழும்பு 06 (வெள்ளவத்தை), கொழும்பு 07 (கறுவாத்தோட்டம்), கொழும்பு 08 (பொரளை) பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த காலப் பகுதியில், கோட்டை, கடுவல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் மஹரகம, பொரலஸ்கமுவ நகரசபை பகுதிகளிலும் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.

இதேவேளை குறித்த காலப் பகுதியில், பவுசர்கள் மூலம் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Sat, 11/13/2021 - 16:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை