சர்வதேச விண்வெளி நிலையம்: 4 விண்வெளி வீரர்கள் பயணம்

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் வழி, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்கள் நால்வர் புறப்பட்டுள்ளனர். வீரர்களின் கலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலிருந்து பல்கோன் 9 ஏவுகணை வழி விண்வெளிக்குள் பாய்ச்சப்பட்டது.

ஸ்பேஸ் எக்ஸின் ‘க்ரூ-3’ விண்வெளிப் பயணம் கடந்த மாதம் 31ஆம் திகதியிலிருந்து ஒத்திவைக்கப்பட்டது. விண்வெளி வீரர்களில் ஒருவர் மருத்துவப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் விண்வெளிப் பயணம் மேற்கொள்வதற்கு வானிலை தோதாக இல்லை என்றும் கூறப்பட்டது.

விண்வெளிப் பயணம், அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வகம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் ஓர் அங்கமாக உள்ளது. விண்வெளி வீரர்கள், பூமியின் சுற்றுப்பாதையில் அமைக்கப்பட்ட நிலையத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு ஆராய்ச்சி மேற்கொள்வர். அதன் மூலம், வருங்காலத்தில் மேற்கொள்ளப்படும் விண்வெளி ஆராய்ச்சிக்குத் தேவையான தகவல் சேகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச விண்வெளி நிலையம் கடந்த இரண்டு தசாப்தங்களாக இவ்வாறான விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Fri, 11/12/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை