யாழ் – கொழும்பு 3வது சேவையாக "உத்தரதேவி" ரயில்

யாழ்ப்பாணம் – கொழும்புக்கிடையில் 03ஆவது ரயில் சேவையாக உத்தரதேவி ரயில்சேவை நேற்று (12) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பிலிருந்து காலை  11.50 மணிக்கு புறப்படும் உத்தரதேவி ரயில், மாலை 6.00 மணிக்கு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தை வந்தடையும். இன்று சனிக்கிழமை காலை 6.10 மணிக்கு உத்தரதேவியும் காலை 9.35 மணிக்கு யாழ்.தேவியும் குளிரூட்டப்பட்ட ரயில் பிற்பகல் 1.37 மணிக்கும் வழமையான சேவையில் ஈடுபடவுள்ளன.

இதேவேளை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் இரவு நேர தபால் ரயில் சேவையும் வழமைபோல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

 

 

 

Sat, 11/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை