கதிர்காமத்தில் 38 பவுண் தங்கத் தகடு கொள்ளை

கொழும்பு CIDயினரால் விசாரணை

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் ஆலயத்திற்கு சொந்தமான 38 பவுண் தங்கத் தகடு திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பு குற்றப் புலனாய் வுத் திணைக்களத்தின் விசேட குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருடப்பட்ட 38 பவுண் எடை கொண்ட தங்கத் தகடு 2019 ஆம் ஆண்டு பக்தர் ஒருவரால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இத் தங்கத் தகடு திருடப்பட்டமை தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. இந்நிலையில் பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரையின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் விசேட பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

 

Wed, 11/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை