தம்புத்தேகமவில் 38 மாணவர்களுக்கு கொரோனா தொற்று

தம்புத்தேகம குருகம வித்தியாலயத்தைச் சேர்ந்த 100 மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜென் பரிசோதனையில் 38 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.  

நேற்றுமுன்தினம் காலை துரித அன்டிஜென் பரிசோதனையில் அவர்களுக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டது. இந்நிலயில் தொற்றுக்குள்ளானவர்களில் 9 சிறுவர்களும் அடங்குவதாக அநுராதபுரம் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.  

இதேவேளை 46 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேர் முதல் தொடர்பாளர்களாக இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.    மேலும் அநுராதபுரம் மாவட்டத்தில் ஹொரவப்பொத்தானஇ பதவிய மற்றும் தம்புத்தேகம பிரதேசங்களில் கடந்த ஐந்து நாட்களாக மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று அன்டிஜென் பரிசோதனைகளின் போது 44 பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தொற்றுநோய் நிபுணர் மருத்துவர் ஆர்.எஸ்.பி ரத்நாயக்க தெரிவித்தார்.  

Tue, 11/02/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை