ஒரு கோடியே 35 இலட்சம் பேருக்கு முழுமையான தடுப்பூசி

9,107 பேருக்கு இதுவரை மூன்றாவது டோஸ்

கொரோனா தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையில் ஒரு கோடியே 35 இலட்சத்து ஆயிரத்து 175 பேருக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்றைய தினம் மேலும் 21 ஆயிரத்து 653 பேருக்கு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 6 ஆயிரத்து 320 பேருக்கு மூன்றாவது டோஸாக பைசர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இது  வரையிலும் 9 ஆயிரத்து 107 பேர் கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸை பெற்றுள்ளனர்.

 

Fri, 11/05/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை