30 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் உயர்வடைவு

- காலி, முல்லைத்தீவில் அதிக மழை

நாட்டின் 73 நீர்த்தேக்கங்களில் 30 நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 80 வீதத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராஜாங்கனை, அங்கமுவ, தெதுரு ஓயா, தப்போவ மற்றும் வெஹரகல உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு பணிப்பாளர், பொறியியலாளர் டீ.அபேசிறிவர்தன தெரிவித்தார்.

நேற்று காலை 8 மணியுடனான காலப்பகுதியில் காலி-எல்பிட்டிய பகுதிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அங்கு 115 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் முல்லைத்தீவில் 80 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இதனிடையே மேல், சப்ரகமுவ, ஊவா, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, அதிக மழையுடனான வானிலையால் 07 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

Sat, 11/06/2021 - 08:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை