நைகர் வகுப்பறையில் தீ: 26 மாணவர்கள் உயிரிழப்பு

தெற்கு நைகரில் வைக்கோல் மற்றும் மரப்பலகையால் ஆன வகுப்பறைகள் தீப்பற்றியதில் குறைந்தது 26 பாடசாலை பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர்.

“தற்போதைய நிலையில் 26 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நால்வர் மோசமான நிலையில் உள்ளனர்” என்று மராடி நகர மேயர் செய்பு அபூபக்கர் தெரிவித்துள்ளார். இதில் ஐந்து மற்றும் ஆறு வயதுடையவர்களே உயிரிழந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

உலகின் வறிய நாடுகளில் ஒன்றான நைகரில் பாடசாலை கட்டடங்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதோடு வைக்கோலால் அமைக்கப்பட்ட கூடாரங்களிலேயே பெரும்பாலான வகுப்புகள் உள்ளன.

கடந்த ஏப்ரில் இவ்வாறான வகுப்பறைகளில் ஏற்பட்ட தீயில் 20 பாடசலை மாணவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Wed, 11/10/2021 - 07:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை