உலகம் 2.4 பாகை செல்சியஸை நோக்கி பயணிப்பதாக எச்சரிக்கை

சிஓபி26 பருவநிலை மாநாட்டில் உறுதிப்பாடுகள் அளிக்கப்பட்டபோதும், உலக வெப்பநிலையை கட்டுப்படுத்தும் இலக்குகளை உலகம் இன்னும் நெருங்கவில்லை என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

1.5 பாகை செல்சியஸ் கட்டுப்பாட்டுக்கு நாடுகள் திட்டமிட்டபோதும் உலகம் 2.4 பாகை செயல்சியஸ் வெப்பநிலையை நோக்கி செல்வதாக இந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

சிஓபி26, “பெரும் நம்பகத்தன்மை, செயற்பாடு மற்றும் அர்ப்பணிப்பு இடைவெளியை கொண்டுள்ளது” என்று காலநிலை நடவடிக்கை தடம் என்ற நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கிளாஸ்கோவில் இடம்பெறும் மாநாடு காலநிலையை கட்டுப்படுத்துவதில் தீர்க்கமானதாக பார்க்கப்படுகிறது.

எனினும் காடழிப்பை நிறுத்துவதற்கான உறுதிமொழி உள்ளடக்கிய தொடர்ச்சியான பெரிய அறிவிப்புகளைத் தொடர்ந்து, கடந்த வார ஐ.நா கூட்டம், எதிர்வுகூறல்கள் நம்பிக்கையுடன் முரண்படுவதாகக் கூறப்படுகிறது.

சிஓபி26 பருவநிலை மாநாடு இந்த வாரம் முடிவுக்கு வரவுள்ளது.

சிஓபி26 மாநாட்டில் பங்கேற்றிருக்கும் நாடுகள் 2030 இல் பசுமையில்ல வாயு உமிழ்வை நிறுத்த உறுதி அளித்தபோதும் 2100 இல் 1.5 செல்சியஸ் இலக்கை கொண்ட ஐக்கிய நாடுகளின் திட்டத்திற்கு அப்பால் பூமி சூடாவதற்கு வாய்ப்பு உள்ளது என்று காலநிலை நடவடிக்கை தடம் அமைப்பின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“2030 இற்கான அனைத்து புதிய கிளாஸ்கோ உறுதிப்பாடுகளுக்கு அப்பாலும், 1.5 செல்சியஸான 2030இன் தேவையை விட இரு மடங்கு உமிழ்வை நாம் மேற்கொள்வோம்” என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

கார்பன் உமிழ்வு அளவில் நிகர பூஜ்ஜிய நிலையை அடைய அமெரிக்கா மற்றும் சீனாவின் புதிய வாக்குறுதிகள், வெப்பநிலை உயர்வு குறித்த தனது மதிப்பீடுகளை சற்று மேம்படுத்தியுள்ளன என்று கூறுகிறது அவ்வமைப்பு.

ஆனால் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பெரும்பாலான அரசாங்கங்கள் தீட்டியுள்ள திட்டங்களின் தரம் மிகவும் குறைவாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

நிகர பூஜ்ஜிய நிலையை அடைவதென்பது பசுமை இல்ல வாயு உமிழ்வை முடிந்தவரை குறைப்பது, பின்னர் மீத உமிழ்வுகளை சமன் செய்வது, உதாரணமாக மரங்களை நடுவதைக் கூறலாம். இது வளிமண்டலத்திலுள்ள கரியமிலவாயுவை நீக்குகிறது.

உலக அளவில் 140 க்கும் மேற்பட்ட நாடுகள் நிகர பூஜ்ஜிய நிலையை அடைவதாக உறுதியளித்துள்ளன, இது உலகின் மொத்த உமிழ்வுகளில் 90 வீதத்தை உள்ளடக்கியது.

உலக வெப்பமாதலை 1.5 பாகை செல்சியஸுக்கு கட்டுப்படுத்துவது காலநிலை மாற்றத்தின் அபாயகரமான தாக்கங்களை தவிர்ப்பதற்கு அவசியம் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

2015ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த காலநிலை மாநாட்டில், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அபாயங்களைத் தடுக்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. அதில் பூமியின் வெப்பநிலையை 1.5 பாகை செல்சியஸுக்கு கட்டுப்படுத்துவதும் அடக்கம்.

இந்தப் புதிய கணக்கீடு புவி மீது இலக்கு வைத்து வரும் எரிகல் போன்றது. இது ஒரு பேரழிவு தரும் அறிக்கை, கிளாஸ்கோவில் கூடியுள்ள அரசாங்கங்கள் உடனடியாக தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உலகின் பொதுவான எதிர்காலத்தைக் காப்பாற்றும் ஒப்பந்தத்தில் சமரசமின்றி தீவிரமாக செயல்பட வேண்டும் என கிரீன்பீஸ் இன்டர்நேஷனல் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ஜெனிபர் மார்கன் கூறினார்.

Thu, 11/11/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை