கென்யாவில் 20 மில்லியன் பேர் தடுப்பூசி பெற ஒரு மாதக் கெடு

எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதி தொடக்கம் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பெறாதவர்கள் மதுபான விடுதிகள், உணவகங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துகளை பயன்படுத்துவது தடுக்கப்படும் என்று கென்ய சுகாதார அமைச்சர் முதாஹி கக்வே தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தடுப்பூசி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கென்யாவில் மக்கள் தொகையில் 10 வீதத்திற்கும் குறைவாக சுமார் 6.4 மில்லியன் பேரே தற்போது தடுப்பூசி பெற்றுள்ளனர். இதன்படி நாட்டின் 20 மில்லியனுக்கும் அதிகமான பெரியவர்கள் தடுப்பூசி பெறுவதற்கு சுமார் ஒரு மாத காலக்கெடுவே வழங்கப்பட்டுள்ளது.

அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியே கென்யாவில் பொதுவாக வழங்கப்படுகிறது. இந்த தடுப்பூசி குறைந்தது 6 வார இடைவெளியில் இரு முறைகள் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையை கையாள்வது குறித்து கக்வே எந்த விளக்கமும் அளிக்காதபோதும் டிசம்பர் முடிவுக்குள் 10 மில்லியன் பேருக்கு தடுப்பூசி வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

Wed, 11/24/2021 - 09:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை