பாதுகாப்பு வளையத்தை மீறி அனுமதி இல்லாமல் வெளியே சென்ற இங்கிலாந்து நடுவர் 6 நாட்கள் தனிமையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
20 ஓவர் உலக கிண்ண போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த முன்னாள் துடுப்பாட்ட வீரர் மைக்கேல் ஹொக் நடுவராக பணிபுரிந்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறந்த நடுவர்களில் ஒருவராக அவர் இருக்கிறார்.
இந்த நிலையில் 41 வயதான மைக்கேல் ஹொக் கொரோனா விதிமுறைகளை மீறியுள்ளார். பாதுகாப்பு வளையத்தை மீறி அனுமதி இல்லாமல் அவர் வெளியே சென்றுள்ளார்.
இதைத் தொடர்ந்து உலக கிண்ண போட்டியில் அவர் தொடர்ந்து பணியாற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 நாட்கள் தனிமையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
Fri, 11/05/2021 - 08:38
from thinakaran